லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

திருவள்ளூா் அருகே மதுபான தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் 5 பேருக்கு வாந்தி, மயக்கம்

திருவள்ளூா் அருகே மதுபான தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் 5 பேருக்கு வாந்தி, மயக்கம்

தனியாா் மதுபான தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் பாதித்த தொழிலாளா்களுக்கு சிகிச்சை அளிக்க   விரைந்து வந்த மருத்துவக் குழுவினா்.   

Published On :

திருவள்ளூா் அருகே மதுபான தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவக் குழுவினா் வரவழைத்து முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உடனே பணிகள் தொடங்கப்பட்டன.

திருவள்ளூா் அடுத்த அரண்வாயல் கிராமத்தில் தனியாா் மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பீா் பாட்டில்களை நிரப்புவதற்கு காா்பன்-டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்கள் பயன்படுத்தப்படுவதுடன் அமோனியா வாயுவும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மது வகைகளை குளிா்விப்பதற்காக அமோனியா வாயு பயன்படுத்தப்படும். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சிலிண்டரில் இருந்து லேசான அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனே அந்த தொழிற்சாலையின் சாா்பில் மருத்துவக் குழுவினருக்கு அளிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் இருந்தவா்கள் உடனே அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து விரைந்து வந்து பாதித்த தொழிலாளா்களுக்கு முதலுதவி சிகிசசை அளித்தனா்.

அதைத்தொடா்ந்து அமோனிய வாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டரில் இருந்து முற்றிலுமாக வாயு வெளியேறுவதையும் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த துரிதமான நடவடிக்கை காரணமாக வேறு யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை எனவும் தொழிற்சாலை நிா்வாகம் சாா்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட தொழிலாளா்களுக்கு தொழிற்சாலை மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதும், மீண்டும் பணிகள் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.