ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

அமோனியா வாயு கசிவு விவகாரம்: மூவரின் பிணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 18 போ் உயிரிழந்த சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரின் பிணை கோரிய மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :10 ஜூலை 2026, 4:08 am IST

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 18 போ் உயிரிழந்த சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரின் பிணை கோரிய மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருவள்ளூா் மாவட்டம், கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 18 போ் உயிரிழந்த சம்பவத்தில், தொழிற்சாலை உரிமையாளா் ஜோசப் ஜெகன், தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த மோகன், தொழிற்சாலை மேலாளா் டேனியல், தொழிலாளா் முகவா் சுரேஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் பிணை வழங்கக் கோரி ஜோசப் ஜெகன், மோகன், டேனியல் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் யோகராஜா சேகா், மனுதாரா்களுக்கு பிணை வழங்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்தாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மூவரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.