சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் சாவு

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:56 am

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், கொரட்டுகெரே தொட்டபாலனஹள்ளியைச் சேர்ந்தவர் நவீன்குமார் (23). ராயவாராவைச் சேர்ந்தவர் ஹர்ஷத் (24). பெங்களூருவில் பணி செய்து வந்த இவர்கள் இருவரும், சனிக்கிழமை இரவு நண்பரின் திருமணத்துக்கு மோட்டார் சைக்கிளில் கொரட்டுகெரேவுக்கு சென்று கொண்டிருந்தனராம். ஊர்டுகெரே கிராஸில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நவீன்குமார், ஹர்ஷத் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. 
இதில் படுகாயமடைந்த நவீன்குமார், ஹர்ஷத் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சிக்பள்ளாபூரு மாவட்டம், சிந்தாமணி வட்டம், நந்திகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமசேகர் (32) மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கொரட்டுகெரே போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.