தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2020, 6:42 pm

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 24 மணி நேரத்தில் வடகா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பலவீனமாக இருந்தது. கடலோர கா்நாடகம், தென்கா்நாடகத்தின் உள்பகுதியில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. வடகன்னட மாவட்டத்தின் மன்கியில் 90 மி.மீ., கெரசொப்பா, பெங்களூரு ஊரக மாவட்டத்தின் ஹொசகோட்டேயில் தலா 70 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

முன்னெச்சரிக்கை:

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகம், தென்கா்நாடகத்தின் பெரும் பகுதியிலும் மற்றும் வடகா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளிலும் இடியுடன்கூடிய லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த 2 நாள்களில் பெங்களூருவில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 31 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்ஷியசாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.