கரூரில் நடைபெற்ற சில நிகழ்வுகள் குறித்து சிபிஐ கேள்வி எழுப்பியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை தெரிவித்தார்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தில்லியில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
”கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளேன். சாட்சிகள் என்ற அடிப்படையில் அன்று நடைபெற்ற குறிப்பிட்ட சில நிகழ்வுகள் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். என்ன கேள்விகள் என்பதை பொதுவெளியில் கூறுவது சரியாக இருக்காது. உரிய பதிலை விசாரணை ஆணையத்தில் அளித்துள்ளேன்.
களத்தில் நின்று பணியாற்றியதால், சிபிஐ சந்தேகங்களுக்கு பதிலளிப்பது பொறுப்பாக எடுத்துக் கொண்டு முறையான பதில் அளித்துள்ளேன்.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடனே சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக முன்னெடுத்து செய்து வருகின்றது. தொடர்ச்சியாக மாநாடு நடத்தி வருகிறோம். ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் முதல்வராகும் சூழல் இருக்கிறது. மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
கரூர் சம்பவம் நடந்த அடுத்த சில நிமிஷங்களில் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் நிகழ்விடத்துக்கு வந்தது குறித்தும், பிறகு தவெக நிர்வாகிகள் செய்த ஏற்பாடுகள் தொடர்பாக செந்தில் பாலாஜி பொதுவெளியில் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் மீது தவெக நிர்வாகிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் செந்தில்பாலாஜியிடம் அதிகாரிகள் கேள்களை கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
What happened in the CBI investigation? Senthil Balaji explains!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மு.க. ஸ்டாலின்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்: செந்தில் பாலாஜி

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை



