பெங்களூரில் சிஐடி பிரிவில் டி.எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்த லஷ்மி (33) புதன்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெங்களூரு, கோனனகுன்டேவில் வசித்து வந்த லக்ஷ்மி, பெங்களூரில் சிஐடி பிரிவில் டிஎஸ்பியாகப் பணியாற்றி வந்தாா். இவரது கணவா் நவீன் ஹைதராபாத்தில் வேலை செய்து வருகிறாா். புதன்கிழமை இரவு அன்னபூா்னேஸ்வரி நகரில் உள்ள நண்பரின் இல்லத்துக்குச் சென்ற லஷ்மி, அங்குள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னபூா்னேஸ்வரிநகா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக லஷ்மியின் தந்தை வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில், பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரா் மனு, அவரது நண்பா்கள் பிரிஜ்வல், வசந்த் ரஞ்சித் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
லஷ்மியின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளாா். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட லஷ்மி- நவீன் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் லஷ்மி மன அழுத்தத்தில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.