மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடும் என, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாமல் திமுக தாமதப்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
ஊரகப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடுகள், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் நகரங்களில் புல்லட் ரயில் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக மெத்தனமாக செயல்பட்டதாகக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைவது மிகவும் முக்கியமானது எனவும் கூறினார்.
திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 11) கலந்துகொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
''2021-ல் ஆட்சி அமைத்த திமுக அதன் கடமைகளைச் செய்ய தவறிவிட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன.
தமிழகத்தின் உணவு பாதுகாப்புக்கு டெல்டா விவசாயிகளே முதுகெலும்பாக உள்ளனர். ஆனால், நெல்லுக்கான ஆதரவு விலையை திமுக உயர்த்தவில்லை. நெல்லை பாதுகாக்க உரிய கிடங்குகளும் தமிழ்நாட்டில் இல்லை.
தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என திமுக அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது? என விவசாயிகள் கேட்கின்றனர். ஆனால், இதற்கு காரணமானவர்களை திமுக பாதுகாக்கிறது. மக்கள் நலனை விட அரசியல் நலனே திமுகவுக்கு முக்கியம். ஆனால், தே.ஜ.கூட்டணிக்கு மக்கள் நலனே முக்கியம்.
திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தார். வேலைகள் பணத்திற்கு விற்கப்பட்டால், ஏழை, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களின் கனவு நசுக்கப்படும்.
மத்திய அரசுக்கு பாராட்டு கிடைக்கும் என்பதற்காக திட்டங்களை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துகிறது திமுக அரசு. ஊரகப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடுகள், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் நகரங்களில் புல்லட் ரயில் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக மெத்தனமாக இருந்தது. தமிழ்நாட்டிற்கு ரூ. 16 லட்சம் கோடி மத்திய அரசு கடன் அளித்துள்ளது.
திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் உள்ளது. திமுகவைச் சேர்ந்தவர்களே பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதை செய்திகளில் பார்த்தோம். பெண்களுக்கு தீங்கிழைத்துவிட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக உள்ளனர். ஆனால், பெண்கள் அச்சமின்றி வாழ்வதை தேஜ கூட்டணி உறுதி செய்யும். குற்றவாளிகள்தான் பயத்தில் வாழ வேண்டுமே தவிர, மக்கள் அல்ல'' எனக் குறிப்பிட்டார்.
Summary
DMK is delaying central government's plans: Prime Minister Narendra Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி

மாற்றத்திற்கானது தேசிய ஜனநாயகக் கூட்டணி : பிரதமர் மோடி

திருச்சியில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

பிரதமர் மோடி பட்டியலிட்ட திமுக அரசின் மோசடிகள்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

