மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் திமுகவின் மோசடிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பட்டியலிட்டுப் பேசினார்.
மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று (மார்ச் 1) பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம். ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் திமுகவின் மோசடிகளைப் பட்டியலிட்டு பிரதமர் மோடி பேசியதாவது,
''அரசியலில் நேர்மை என்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் எடுத்துக்காட்டாக இருந்தவர் காமராஜர். ஆனால், தற்போது ஆட்சி செய்துவரும் திமுக இதற்கு நேர்மாறாக உள்ளது.
பணியிட மாறுதல் விவகாரத்தில் ரூ. 365 கோடி மோசடி,
அரசுப் பணி வாங்கித் தரும் விவகாரத்தில் ரூ.900 கோடி மோசடி,
ஒப்பந்தங்கள் பெறுவதில் ரூ. 1000 கோடி மோசடி,
மணல் திருட்டு விவகாரத்தில் ரூ. 4700 கோடி மோசடி,
டாஸ்மாக் மோசடி மட்டுமே ரூ. 40,000 கோடி...
பொதுவாக நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அமைச்சர்களிடையே போட்டி இருக்கும். ஆனால், திமுக அமைச்சர்களிடையே மோசடி செய்வதில் போட்டாபோட்டி நிலவி வருகிறது.
இவர்கள் திருடுவதெல்லாம் மக்களிடமிருந்துதான். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்களிடமிருந்து திமுக திருடுகிறது. இத்தகைய ஊழல் அரசு தொடர எந்தவித உரிமையும் கிடையாது. இதனால்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தேர்வு செய்ய மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
காங்கிரஸ் ஆட்சி, மத்தியில் இருந்தபோது ஜல்லிக்கட்டை தடை செய்தது . ஆனால், அதனைத் தொடரச் செய்தது நமது ஆட்சி. நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி தமிழ் கலாசாரத்திற்கு மரியாதை செய்தது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான்'' என பிரதமர் மோடி பேசினார்.
Summary
PM Modi lists DMK's corruption in Madurai NDA Conference
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10 கோடி பார்வையாளர்களைக் கடந்த மோடி - மெலோனி விடியோ!









