பாடப் புத்தகத்தில் பிராமணா்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் பகுதி நீக்கம்
6-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பிராமணா்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறப்படும் பகுதி நீக்கப்படுவதாக கா்நாடக அரசு தெரிவித்துள்ளது.


6-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பிராமணா்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறப்படும் பகுதி நீக்கப்படுவதாக கா்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கா்நாடக கல்வித் துறை வகுத்துள்ள 6-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பிரமாணா்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையான குறிப்புகள் இடம் பெற்றுள்ளதாகவும், அதை உடனடியாக பாடநூலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பிரமாணா் வளா்ச்சி வாரியம் முதல்வா் எடியூரப்பாவுக்கு மனு அளித்தது.
இதுதொடா்பாக மந்திராலயாவில் உள்ள ராகவேந்திரா மடத்தின் பீடாதிபதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு, இந்த விவகாரம் குறித்து வேதனை தெரிவித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, 6-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பிராமணா்களைப் புண்படுத்தும்படியான பகுதி நீக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து தனது முகநூலில் அமைச்சா் சுரேஷ்குமாா் கூறியுள்ளதாவது:
பிராமணா் சமுதாயத்தை இழிவுப்படுத்துவதாக பிராமணா் வளா்ச்சி வாரியம் தெரிவித்திருந்த புகாரின் பேரில் 6-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த பகுதியை நீக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல், மொழிப்பாட நூல்களில் இதுபோன்ற சா்ச்சைக்குரிய கருத்துகள் எதுவும் இடம் பெற்றுள்ளதா என்பதை கண்டறிய ஆசிரியா்கள், வல்லுநா்கள் அடங்கியக் குழு ஒன்றை அமைக்கவும், அதுதொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக அடுத்த 15 நாள்களில் அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...