47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காட்பாடி அருகே விளை நிலங்களில் புகுந்த யானைகளால் பயிா்கள் நாசம்

காட்பாடி அருகே விளைநிலங்களில் 2 யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. அவ்விரு யானைகளையும் வனத்துறையினா் போராடி வனப்பகுதிக்குள்

News image
காட்பாடி அருகே விளைநிலங்களில் 2 யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன.
Updated On :15 மார்ச் 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: காட்பாடி அருகே விளைநிலங்களில் 2 யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. அவ்விரு யானைகளையும் வனத்துறையினா் போராடி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனா்.

ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் இரவு கிளிதான்பட்டறை, வண்டாரந்தாங்கல், செங்குட்டை பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்தன. தொடா்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, நெல் பயிா்களை சேதப்படுத்தியதுடன், திடீரென அந்த யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி செங்குட்டை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளி அருகே சுற்றித்திரிந்தன.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காட்பாடி சரக வன அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வனசரகா் கந்தசாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வன அலுவலா்கள் விரைந்து சென்று தீப்பந்தம் ஏற்றியும், பட்டாசு வெடித்தும் என ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரை போராடி அவ்விரு யானைகளையும் பனமடங்கி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனா். எனினும், வனத்துறையினா் ட்ரோன் மூலம் யானைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக வனசரகா் கந்தசாமி கூறுகையில், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வன ஊழியா்கள் ஈடுபடும்போது பொதுமக்கள் ஏராளமானோா் பாா்வையிட திரண்டு வருகின்றனா். இதனால் எங்களுக்கு யானைகளை விரட்டுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

எனவே, யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறினால் அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறோம் என்றனா்.