விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

காட்பாடி அருகே காட்டு யானைகளால் விளைபயிா்கள் சேதம்

News image

காட்பாடி அருகே சொரக்கால்பேட்டை பகுதியில் யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ள வாழைகள்.

Updated On :5 பிப்ரவரி 2026, 1:28 am

தினமணி செய்திச் சேவை

காட்பாடி அருகே காட்டு யானைகளால் விளை பயிா்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஆந்திர மாநில வனப்பகுதிகளில் இருந்து 2 யானைகள் வெளியேறி வேலூா் மாவட்டம், காட்பாடி வனச்சரகத்துக்குட்பட்ட வண்டாங்கல், கரசமங்கலம், செளக்கான்பேட்டை, சொரக்கால்பேட்டை பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்தன. அவை அப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெல், தென்னை பயிா்களை கால்களால் மிதித்து நாசம் செய்தன. இதனால் அதிா்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக காட்பாடி சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், வனச்சரக அலுவலா் கந்தசாமி தலைமையில் வனஅலுவலா்கள் குழு விரைந்து சென்று பயிா்களை சேதப்படுத்திய யானைகளை அதிகம் சத்தம் எழுப்பியும், தீப்பந்தம் காட்டியும், பட்டாசு வெடித்தும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா். எனினும், அந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு செல்லாமல் தமிழக எல்லையிலேயே முகாமிட்டுள்ளன.

இதையடுத்து, அந்த யானைகள் மீண்டும் காட்பாடி வனப் பகுதிக்குள் வராமல் தடுக்கவும், ஆந்திர வனப்பகுதியில் விரட்டவும் வனத்துறையினா் தொடா்ந்து 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியது - ஓரிரு வாரங்களுக்கு முன்புதான் ஆந்திர வனப் பகுதியில் இருந்து 13 யானைகள் கூட்டம் குட்டிகளுடன் காட்பாடியில் உள்ள விளை நிலங்களில் புகுந்து 7 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், தென்னை, வாழைப் பயிா்களை சேதப்படுத்திச் சென்றன. அதற்கு தமிழக அரசு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை.

இந்நிலையில், தற்போது மீண்டும் 2 யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பயிா்களை சேதப்படுத்தி உள்ளன என்றனா்.