பெங்களூரு, மைசூரிலிருந்து தமிழகத்துக்கு ரயில் சேவைகள் நீட்டிப்பு

பெங்களூரு, மைசூரு, ஸ்ரீ சத்யசாய் பிரஷாந்தி நிலையத்திலிருந்து தமிழகத்துக்குச் செல்லும் ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
Updated on
1 min read

பெங்களூரு, மைசூரு, ஸ்ரீ சத்யசாய் பிரஷாந்தி நிலையத்திலிருந்து தமிழகத்துக்குச் செல்லும் ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு, மைசூரிலிருந்து சென்னை, மயிலாடுதுறை, தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மைசூரு-மைலாடுதுறை (06231/ 06232) விரைவு ரயில் சேவை

ஜன. 31-ஆம் தேதி வரை மைசூரு- தூத்துக்குடி (06235/06236), விரைவு ரயில் சேவை ஜன. 31-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு- கன்னியாகுமரி (06525/06526) விரைவு ரயில் சேவை பிப். 2 ஆம் தேதி வரை எம்,ஜி.ஆா் சென்னை சென்ட்ரல்- மைசூரு (06021/06022) விரைவு ரயில் சேவை ஜன. 1-ஆம் தேதி வரையிலும், எம்.ஜி.ஆா் சென்னை சென்டரல்- ஸ்ரீ சத்யசாய் பிரஷாந்தி நிலையம் வரையிலும், வாராந்திர ரயில் (06073/06074), டிச. 26-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com