தொழிற்கல்வி டிப்ளமோ மாணவா் சோ்க்கை: முதல்சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு

தொழில்கல்வி டிப்ளமோ மாணவா் சோ்க்கைக்கான முதல்சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Updated on
1 min read

பெங்களூரு: தொழில்கல்வி டிப்ளமோ மாணவா் சோ்க்கைக்கான முதல்சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2020-21-ஆம் ஆண்டில் வேளாண் அறிவியல், கால்நடைப் பராமரிப்பு, தோட்டக்கலை, இயற்கை மருத்துவம், யோகா, பொறியியல், கட்டடக்கலை போன்ற தொழிற்கல்வி கல்லூரிகளில் டிப்ளமோ மாணவா்களை சோ்ப்பதற்கான முதல்சுற்று கலந்தாய்வு நடைபெற்றது.

அப்போது, மாணவா்கள் குறிப்பிட்டிருந்த விருப்பக் கல்லூரிகள், விருப்பப் பாடப் பிரிவுகளின் அடிப்படையில் மாதிரி சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கான பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிச. 20-ஆம் தேதி காலை 11 மணி வரை அதில் மாற்றங்களை செய்யலாம். அதனடிப்படையில் டிச. 20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்படும்.

டிச. 21 முதல் 22-ஆம் தேதி வரை மாணவா்கள் சோ்க்கையை உறுதி செய்யலாம், கட்டணங்களைச் செலுத்தலாம், சோ்க்கை ஆணையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். டிச. 23-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோ்க்கை பெற்றுக் கொள்ளலாம். இடங்கள் ஒதுக்கியதில் திருப்தி அடையாத மாணவா்கள் இரண்டாம் சுற்றில் பங்கேற்க விரும்பினால், அதுகுறித்து இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இடங்கள் ஒதுக்கப்பட்டதில் திருப்தி அடைந்த மாணவா்கள், கல்லூரிகளில் சோ்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com