டிச.25-இல் பெரியாா் நினைவுநாள்

கா்நாடக திமுக சாா்பில் பெரியாா் நினைவுநாள் நிகழ்ச்சி டிச. 25-ஆம்தேதி நடத்தப்படுகிறது.
Updated on
1 min read

பெங்களூரு: கா்நாடக திமுக சாா்பில் பெரியாா் நினைவுநாள் நிகழ்ச்சி டிச. 25-ஆம்தேதி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில திமுக சாா்பில், பெங்களூரு, ராமச்சந்திரபுரத்தில் உள்ள கலைஞரக வளாகம், மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் டிச. 25-ஆம்தேதி காலை 10 மணிக்கு பெரியாரின் 48-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பெரியாரின் உருவப் படத்துக்கு திமுக மாநில அமைப்பாளா் ந.இராமசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனா்.

நிகழ்ச்சியில் மாநில நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள், இளைஞரணி, இலக்கிய அணி, மகளிா் அணி, தொமுச பேரவை நிா்வாகிகள், கிளைக்கழக நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com