திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கஞ்சா விற்பனை: 2 போ் கைது

கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 6 லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:20 pm

DIN

கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 6 லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு ஊரகம், ஆனேக்கல், சந்தாபுராவைச் சோ்ந்த சன்னத் (24), எச்.எஸ்.ஆா் லேஅவுட்டைச் சோ்ந்த முகமது பிலால் (24) ஆகியோா் ஜே.சி.நகா் மில்லா்ஸ் சாலையில் உள்ள கல்லூரி அருகே போதைப்பொருள் கஞ்சாவை விற்பனை செய்து வந்தனராம்.

தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று, சன்னத், முகமது பிலால் ஆகியோரைக் கைது செய்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா, காரை பறிமுதல் செய்தனா். விசாரணையில் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஜே.சி.நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.