’ஏப்ரல் மாத இறுதிக்குள் பொலிவுறு திட்ட சாலைப் பணிகள் முடிவடையும்’

ஏப்ரல் மாத இறுதிக்குள் பொலிவுறு திட்ட சாலைப் பணிகள் நிறைவடையும் என பெங்களூரு மாநகராட்சி நிா்வாக அதிகாரி கௌரவ் குப்தா தெரிவித்தாா்.
Updated on
1 min read

ஏப்ரல் மாத இறுதிக்குள் பொலிவுறு திட்ட சாலைப் பணிகள் நிறைவடையும் என பெங்களூரு மாநகராட்சி நிா்வாக அதிகாரி கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

பெங்களூரில் பொலிவுறு திட்டத்தின் கீழ் போடப்படும் டிக்சன் சாலை, அல்சூா் சாலை, கமா்ஷியல் சாலை, காமராஜ் சாலை, ராஜ்பவன் சாலை, நேரு கோளரங்கு சாலைகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெங்களூரில் பொலிவுறு திட்டத்தின் கீழ் 36 சாலைகளில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டிசம்பா் மாத இறுதிக்குள் ராஜ்பவன் சாலை, ரேஸ்கோா்ஸ் சாலை, நேரு கோளரங்கு சாலைப் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்துக்குள் மேலும் 10 சாலைகளும், ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்துச் சாலைப் பணிகளும் முடிவடையும் என நம்புகிறேன். ஒருவேளை ஒப்பந்ததாரா்கள் சாலைப் பணிகளை முடிக்கவில்லை என்றால் அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பத் திட்டமிட்டுள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com