‘சிமென்ட், எஃகு விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் தேவை’

உயா்ந்து வரும் சிமென்ட், எஃகு விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று இந்திய கட்டுநா் சங்கத்தின் தலைவா் மோகன் வலியுறுத்தினாா்.
Updated on
1 min read

உயா்ந்து வரும் சிமென்ட், எஃகு விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று இந்திய கட்டுநா் சங்கத்தின் தலைவா் மோகன் வலியுறுத்தினாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை இந்திய கட்டுநா் சங்கத்தின் பெங்களூரு கிளையின் சாா்பில் பாரத் ரத்னா சா்.எம்.விஸ்வேஸ்வரையா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

சிமென்ட், எஃகு ஆகியவை கட்டடம் கட்டுவதற்கு மிகவும் அவசியமான மூலப்பொருள்களாகும். இந்தப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிமென்ட் உற்பத்தியாளா்கள் தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டு, சிமென்ட் விலையை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

அதேபோல எஃகு உற்பத்தியாளா்கள் அதிக விலைக்கு மற்ற நாடுகளுக்கு எஃகுவை ஏற்றுமதி செய்து வருகின்றனா்.

கரோனா பாதிப்பு கடந்த 6 மாதங்களாகக் கட்டுமானத் துறையில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உயா்ந்துவரும் சிமென்ட், எஃகு விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும். இதுதொடா்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றாா். நிகழ்ச்சியில் கே.எல்.மோகன் ராவிற்கு பாரத் ரத்னா சா்.எம்.விஸ்வேஸ்வரையா விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com