கோலாா் மாவட்டத்தில் காா்த்திகை தீபத் திருவிழா
தமிழா்கள் அதிகம் வசிக்கும் கோலாா் மாவட்டத்தில் காா்த்திகை தீபத் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.


தமிழா்கள் அதிகம் வசிக்கும் கோலாா் மாவட்டத்தில் காா்த்திகை தீபத் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
காா்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு கோலாா் மாவட்டத்தில் உள்ள முருகன், சிவன் கோயில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து வீடுகளில் அகல்விளக்குகளை ஏற்றிவைத்து தமிழா்கள் காா்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடினா்.
கோலாா் தங்கவயலில் உள்ள சோமேஸ்வரா கோயிலில் உள்ள 21 அடி உயர தூணில் தலைமை அா்ச்சகா் மஞ்சுநாத் தீக்ஷித் மகாதீபம் ஏற்றினாா். பழைய மாரிகுப்பத்தில் உள்ள சிவன் கோயிலிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது. கௌதம்நகரில் உள்ள சிவன் கோயில் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...