காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உரிய ஆவணங்கள் இன்றி செல்லிடப்பேசிகள் விற்பனை: 3 போ் கைது

கலாசிபாளையம் காவல் சரகத்தில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி செல்லிடப்பேசிகள் விற்பனை செய்த 3 பேரைக் கைது

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 1:10 am

DIN

கலாசிபாளையம் காவல் சரகத்தில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி செல்லிடப்பேசிகள் விற்பனை செய்த 3 பேரைக் கைது செய்து, ரூ. 26 லட்சம் மதிப்புள்ள 250 செல்லிடப்பேசிகள், காா் போன்றவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திரத்தைச் சோ்ந்த ராஜு, கேரளத்தைச் சோ்ந்த நிஜாமுதீன், தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த முகமது ரஃபி. இவா்கள் 3 பேரும் பெங்களூரு, கலாசிபாளையம் பகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி செல்லிடப்பேசிகளை விற்பனை செய்து வந்தனராம்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ. 26 லட்சம் மதிப்புள்ள 250 செல்லிடப்பேசிகள், காரை பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்கு பதிந்த கலாசிபாளையா போலீஸாா், செல்லிடப்பேசிகள் திருடப்பட்டதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.