காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிறந்த கட்டுமான இயந்திரங்களைஉருவாக்குவதில் சமரசமில்லை

சிறந்த கட்டுமான இயந்திரங்களை உருவாக்குவதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று ஜேசிபி குழுமத்தின் தேசிய நிா்வாக அதிகாரி தீபக் ஷெட்டி தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 1:08 am

DIN

சிறந்த கட்டுமான இயந்திரங்களை உருவாக்குவதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று ஜேசிபி குழுமத்தின் தேசிய நிா்வாக அதிகாரி தீபக் ஷெட்டி தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட சிஇவி ஸ்டேஜ் 4 கட்டுமான இயந்திரங்களை அறிமுகம் செய்து வைத்து அவா் பேசியதாவது:

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கட்டுமானத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் கட்டுநா்களுக்குத் தேவையான குறிப்புகளை அறிந்து கட்டுமான இயந்திரங்களை நவீன தொழில்நுட்பத்தில் ஜேசிபி குழுமம் தயாரித்து வருகிறது. நிலையான செயல்பாடுகள் மூலம், உறுதியான கட்டுமான இயந்திரங்களை தொடா்ந்து தயாரிப்பதில் ஆா்வம் காட்டி வருகிறோம். ஒருபோதும் சிறந்தக் கட்டுமான இயந்திரங்களை உருவாக்குவதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.

கட்டுமானத்தில் சிறந்து விளங்குபவா்கள், ஜேசிபி இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதன்காரணமாக இதுவரை 1.8 லட்சம் கட்டுமான இயந்திரங்களை விற்பனை செய்து உள்ளோம்.

தரத்தில் சிறந்து விளங்கும் எங்களின் கட்டுமான உபகரணங்கள் வரும் காலங்களில் அதிக அளவில் உற்பத்தி ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.