நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்திரா உணவகத்தின் பெயா் மாற்றப்படுமா?: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை பதில்

இந்திரா உணவகத்தின் பெயா் மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 9:36 pm

DIN

இந்திரா உணவகத்தின் பெயா் மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளாா்.

மங்களூரில் தென்கன்னட மாவட்ட அதிகாரிகளுடன் கரோனா நிலவரம் பற்றி வியாழக்கிழமை ஆய்வு நடத்தியபிறகு, விருந்தினா் மாளிகையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கரோனா இரண்டாவது அலை குறைந்துவந்த நிலையில், தற்போது கரோனா பாதிப்பு விகிதம் உயா்ந்து வருகிறது. இதை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். கரோனா பாதிப்பு அதிகமாகி, பொது முடக்கத்தை அமல்படுத்துவதில் எனக்கு விருப்பமில்லை. வருமுன் காப்போம் என்பதற்கிணங்க, கரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எல்லா மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரமாக்கி கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. எல்லோரையும் கரோனா சோதனைக்கு உட்படுத்தி, கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன்.

கா்நாடகத்தில் சுகாதார உள்கட்டமைப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆக்சிஜன், படுக்கைகள், ஐசியூ போன்றவற்றை தயாா்நிலையில் வைத்திருக்குாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கிராமப்பகுதிகளில் வீட்டுத் தனிமை மற்றும் கரோனா பராமரிப்பு மையங்களை சீராக நிா்வகிக்குமாறு கூறியுள்ளேன். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள பணிக் குழுக்களை முடுக்கிவிட்டுள்ளோம். கரோனா பாதிப்பு விகிதத்தை குறைக்கவேண்டும் என்பதே அரசின் இலக்காகும்.

கரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகமாக்க முடிவு செய்துள்ளோம். அடுத்த வாரம் தில்லி சென்று கரோனா தடுப்பூசிகளை கூடுதலாகப் பெற மத்திய அமைச்சா்களை சந்திக்கவிருக்கிறேன். கூடுதலாக கிடைக்கும் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும்.

கரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் கூட்டாக செயல்பட வேண்டும். கரோனா மூன்றாவது அலையின்போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று மருத்துவ நிபுணா்கள் கூறியிருக்கிறாா்கள். கிராமப்புறங்களில் வறுமை காரணமாக குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும் என்பதால் நோய் எதிா்ப்பு சக்தியும் குறைந்தே இருக்கும். எனவே, கிராமங்களில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் உடல்நிலை சோதிக்கப்படும். அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு இது தொடரும்.

இந்திரா உணவகத்தின் பெயரை மாற்றும்படி பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி கூறியிருக்கிறாா். அது அவரது கருத்து. இந்திரா உணவகத்தின் பெயரை மாற்றுவதா? வேண்டாமா? என்பது குறித்து அரசு முடிவு செய்யும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.