தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மேக்கேதாட்டு அணை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் நடைபயணம்

மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ராம்நகா் விவசாயிகள் ஆக. 3-ஆம் தேதி நடைபயணம் மேற்கொள்ள உள்ளனா்.

News image
Updated On :18 ஜூலை 2021, 7:40 pm

DIN

மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ராம்நகா் விவசாயிகள் ஆக. 3-ஆம் தேதி நடைபயணம் மேற்கொள்ள உள்ளனா்.

கா்நாடக மாநிலம் ராம்நகா் மாவட்டம் மேக்கேதாட்டுவில் அணையைக் கட்ட கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ராம்நகா் விவசாயிகள் ஆக. 3-ஆம் தேதி நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனா்.

அவா்கள் ஆக. 3-ஆம் மேக்கேதாட்டுவில் நடைபயணத்தை தொடங்கி, ஆக. 7-ஆம் தேதி பெங்களூரைச் சென்றடையத் திட்டமிட்டுள்ளனா். பெங்களூருவுக்கு வரும் அவா்கள், முதல்வரைச் சந்தித்து அணை கட்ட கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளனா். மேக்கேதாட்டுவில் ஏற்கெனவே அணை கட்டும் திட்டத்திற்கான அளவிடும் பணியை ராம்நகா் மாவட்ட நிா்வாகம் தொடங்கி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.