தேசிய தொழில்நுட்ப கழகம்(என்ஐடி) திருச்சியில் காலியாக உள்ள 122 பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். NITT/R/F/L10/2026/01
பணி: Professor
காலியிடங்கள்: 2
பணி: Associate Professor
காலியிடங்கள்: 15
பணி: Assistant Professor
காலியிடங்கள்: 105
சம்பளம்: என்ஐடி விதிமுறைகளின்படி வழங்கப்படும்.
வயதுவரம்பு: உதவிப் பேராசிரியர் பணிக்கு 35-க்குள் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு வயதுவரம்பில் கிடையாது.
தகுதி: Engineering, Humanities, Science, Management, Architecture, Education போன்ற ஏதாதொரு துறையில் அல்லது அதற்கு இணையான துறையில் முதல் வகுப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றும், முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது GATE,UGC NET,CSIR-NET போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம், கற்பிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து விவரம் தகுதியானவர்களுக்கு அவர்களது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு, பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar, National Institute of Technology, Trichy - 620 015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.4.2026
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் வந்து சேர கடைசி நாள்: 16.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited from the qualified Indian Nationals / Overseas Citizens of India (OCIs), with excellent academic background and commitment to quality teaching and research, for faculty positions in various Departments at different designations of NIT, Tiruchirappalli as per the details
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மெட்ராஸ் உரத்தொழிற்சாலையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் டிரெய்னி பணி!

மீன்வளத்துறை அலுவலகத்தில் உதவிப் பேராசிரியர், உதவியாளர் பணி!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

இர்கான் நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


