வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... ரயில்வேயில் கிளார்க், தட்டச்சர் பணி: காலியிடங்கள் 1688
இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1688 கிளார்க் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

ரயில்வேயில் கிளார்க், தட்டச்சர் பணி - இந்தியன் ரயில்வே
இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1688 கிளார்க் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்களை பார்ப்போம்...
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 7/2026
பணி: Commercial – Ticket Clerk
காலியிடங்கள்: 700
தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
சம்பளம்: மாதம் ரூ.21,700
பணி: Accounts Clerk – Typist
காலியிடங்கள்: 200
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிப்பதுடன் கணினியில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் +2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
பணி: Junior Clerk – Typist
காலியிடங்கள்: 600
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிப்பதுடன் கணினியில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் +2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
பணி: Trains Clerk
காலியிடங்கள்: 188
தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயதுவரம்பு: 1.1.2027 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
ஆர்ஆர்பி மண்டல வாரியான காலிப்பணியிட விவரங்கள்:
அகமதாபாத்- 26, அஜ்மீர் 1 124, பெங்களூரு - 45, போபால் - 59, புவனேஸ்வர் - 40, பிலாஸ்பூர் - 20, சண்டிகர் - 78, சென்னை - 168, கோரக்பூர் - 72, குவஹாத்தி - 49, ஜம்மு-ஸ்ரீநகர் - 51, கொல்கத்தா - 329, மால்டா - 23, மும்பை - 140, முசாஃபர்பூர் - 7, பாட்னா - 43, பிரயாக்ராஜ் - 149, ராஞ்சி - 75, செகந்திராபாத் - 72, சிலிகுரி - 43, திருவனந்தபுரம் - 75
தேர்வு செய்யப்படும் முறை: ஆண்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், தட்டச்சு திறன், கணினியில் பணிபுரியும் திறன், சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் பொது அறிவு, கணிதம், பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு போன்ற பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். பிளஸ் 2 தரத்தில் கேள்விகள் இருக்கும்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். இரண்டு கட்ட தேர்வுகளுக்கான பாடத்திட் டம், மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள், இடம் பற்றிய விவரங்கள் இ-நுழைவுச் சீட்டுமூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
தேர்வுக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.500. இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ,250. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrb.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.11.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Railway Recruitment Board invites online recruitment applications through Railway Recruitment Board website for the following posts of 1688 NTP Cvacancies on regular basis.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


