அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

கரூர் மாவட்ட சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி?

கரூர் மாவட்ட சுகாதார மையங்களில் நிரப்பப்பட உள்ள பாராமெடிக்கல் பணியிடங்கள் குறித்து...

Applications are invited for Various Posts on contract basis in karur Government Medical College

கரூர் மாவட்ட சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணிகள் - கரூர் மாவட்டம்

Published On :

கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் நலப்பணிகள், மாவட்ட தொடக்கநிலை இடையீட்டுச் சேவை மையம். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலகங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பல்வேறு ஒப்பந்த பணியிடங்களுக்கு பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.26-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்கள் பார்ப்போம்....

பணி: Lab Technician

காலியிடம்: 1

தகுதி: டிஎம்எல்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.17,000

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Occupational Therapist

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.23,000

தகுதி: தொழில்சார் சிகிச்சை (ஆக்குபேஷனல் தெரபி) பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Radiographer

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.17,000

கல்வித்தகுதி: பி.எஸ்சி கதிரியக்கவியல் அல்லது கதிரியக்க நோயறிதல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: MTM Health Inspector

காலியிடங்கள்: 22

சம்பளம்: மாதம் ரூ.17,500

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பயிற்சிக்கான இரண்டு வருடப் பயிற்சியை முடித்திருக்க வேண்டும்; அத்துடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் இயக்குநரால் வழங்கப்படும் பயிற்சிச் சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Staff Nurse

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.21,000

தகுதி: இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பெறப்பட்ட பி.எஸ்சி நர்சிங் அல்லது மகப்பேறு மருத்துவத்தில் டிப்ளோமா (டிஜிஎன்எம்) முடித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது: 40- க்குள் இருக்க வேண்டும்.

பணி: UHN

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.17,500

தகுதி: இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனத்தில் ஏஎன்எம் படிப்பை முடித்து நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi-purpose Hospital Worker

காலியிடங்கள் 2

சம்பளம் : ரூ.11,000

தகுதி: தமிழில் எழுத. படிக்க தெரிந்திருக்க வேண் டும்.

வயதுவரம்பு: 59-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Dispenser(Homeopathy)

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: +2 தேர்ச்சியுடன் டி.பார்ம் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 59-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Dispenser(Siddha)

காலியிடங்கள்: 2

சம்பளம் : மாதம் ரூ.40,000

வயதுவரம்பு: 59-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சித்தா பிரிவில் டி.பார்ம் முடித்திருக்க வேண்டும்.

பணி: Social Worker (National Mental Health Act)

காலியிடங்கள்: 1

சம்பளம் : மாதம் ரூ.27,000

தகுதி: சமூகப் பணி (மருத்துவ மற்றும் மனநலச் சமூகப் பணி) முதுகலைப் பட்டம் மற்றும் குறிப்பிடப்பட்ட நிறுவனங்களில் ஆறு மாதப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Security (National Mental Health Act)

காலியிடங்கள்: 1

சம்பளம் : மாதம் ரூ.11,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.karur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களைகளிலும் சுய சான்றொப்பம் செய்து, விண்ணப்பப் படிவத்தில் தற்போதைய புகைப்படத்தையொட்டி கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டி அஞ்சல் முகவரி:

நிர்வாக் செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம். கரூர் மாவட்டம், கரூர் - 639 007

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 26.9.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited for Various Posts on contract basis in karur Government Medical College...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.