“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு!டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!ஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் லவ்லினா!காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்

சேலம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் வேலை: 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சேலம் மாவட்ட இளைஞர் சேலம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

Applications are invited for Assistant-cum-Bench Clerk

சேலம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் வேலை

Published On :

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட உதவியாளருடன் கூடிய அமர்வு எழுத்தர், இளநிலை உதவியாளருடன் கூடிய பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant cum Bench Clerk

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: அறிவியல், கலை, வணிகவியல், பொறியியல், மருத்துவம் அல்லது வேறு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி இயக்கும் பணியில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுவரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Assistant cum Record Clerk

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Office Assistant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.13,000

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://salem.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தாரர்கள் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் எந்தெவாரு முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம், அறை எண்.415. நான்காவது தளம். மாவட்ட ஆட்சியகரம் சேலம் -636 001 தொலைபேசி எண்.0427-2415900

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 12.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

District Child Protection Unit, Salem District – Applications are invited for Assistant-cum-Bench Clerk, Junior Assistant-cum-Bench Clerk and Office Assistant Posts on contract basis-26.09.2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.