
மெஸ்ஸி அசிஸ்ட்: சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டத்தில் வெடித்த மோதல்!
எம்எல்எஸ் தொடரில் நூலிழையில் வெற்றியை தவறவிட்ட இன்டர் மியாமி அணி குறித்து...

அட்லாண்டா யுனைடெட் வீரர்களுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட லியோ மெஸ்ஸி. - படம்: ஏபி
அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி நூலிழையில் தனது வெற்றியைத் தவறவிட்டது. இருப்பினும் போட்டி சமனில் முடிவடைந்தது.
இன்டர் மியாமி அணி தனது சொந்த மண்ணில் அட்லாண்டா யுனைடெட் உடன் மோதியது. இந்தப் போட்டியில் 2-2 என சமனில் முடிவடைந்தது. இதில் இறுதியில் வீரர்கள் மோதிக்கொண்டார்கள்.
இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 32ஆவது நிமிஷத்தில் அசிஸ்ட் செய்தார். அதனை காசிமெரோ கோலாக மாற்றினார். அடுத்து 45+1ஆவது நிமிஷத்தில் செகோவியா அசிஸ்ட்டில் லூயிஸ் சௌரஸ் கோல் அடித்தார்.
அட்லாண்டா அணி சார்பில் 35ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. பின்னர் ஒரு பெனால்டியை தவறவிட்டாலும் 87ஆவது நிமிஷத்தில் கிடைத்த மற்றுமொரு பெனால்டியில் கோல் அடித்து அசத்தினார்கள்.
ஸ்டாப்பேஜ் நேரத்தில் லியோனம் மெஸ்ஸி ஃபைனல் தேர்டு பாக்ஸிற்குள் இரண்டு மூன்று முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்டது. ஆனால், அட்லாண்டா அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்ததால் அவைகள் கோலாக மாறாமல் சென்றன.
போட்டிக்குப் பிறகு இரு அணி வீரர்களும் மோதிக்கொண்டார்கள். பெனால்டியில் மாற்றுக் கருத்துகள் இருந்தன. மெஸ்ஸியும் எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியில் மெஸ்ஸிதான் அதிகமான ரேட்டிங் பெற்றார். அவருக்குதான் ஆட்ட நாயகன் விருது அளிக்கப்படுமென ஆங்கில ஊடகங்கள் கருத்து தெரிவிக்கப்படுகின்றன.
Messi to Casemiro for the @InterMiamiCF opener.
— Major League Soccer (@MLS) September 6, 2026
Two-straight games with a goal for Casemiro. ð pic.twitter.com/NCJkMj5cZg
WOW! Insane team defense by @ATLUTD to deny Inter Miami the winner! ð± pic.twitter.com/K9rN1ttYvE
— Major League Soccer (@MLS) September 6, 2026
Summary
Messi's Assist: Clash Erupts During Inter Miami Match That Ended in a Draw!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






