5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

கால்பந்தின் கடவுள் மெஸ்ஸி... வைரலாகும் பிரேசில் வீரரின் பேட்டி!

இன்டர் மியாமி கிளப் அணியில் இணைந்த பிரேசில் வீரர் காசிமிரோவின் பேட்டி குறித்து...

News image

லியோனல் மெஸ்ஸி, காசிமிரோ. - படங்கள்: எக்ஸ் / இன்டர் மியாமி சிஎஃப்

Updated On :31 ஜூலை 2026, 5:59 pm IST

இன்டர் மியாமி கிளப் அணியில் இணைந்த பிரேசில் மிட்ஃபீல்டர் காசிமிரோ (34 வயது) அளித்த பேட்டியில், “கால்பந்தின் கடவுள் மெஸ்ஸி” எனக் கூறியுள்ளார். மெஸ்ஸி ஆர்ஜென்டீனாவில் இருந்து தற்போது மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பியுள்ளார்.

கால்பந்து உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனா இறுதிப் போட்டியில் 0-1 என ஸ்பெயின் அணியிடம் தோல்வியுற்றது. இந்தத் தொடரில், மெஸ்ஸி (39 வயது) 8 கோல்கள் 4 அசிஸ்ட் செய்த மெஸ்ஸிக்கு தங்கப் பந்து விருது அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரேசில் அணி காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் வெளியேறியது. உலகக் கோப்பை முடிந்து தற்போது, கிளப் போட்டிகள் நடைபெற தொடங்கியிருக்கின்றன.

அமெரிக்காவில் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணியில் மெஸ்ஸி கடந்த 2023 முதல் விளையாடி வருகிறார். தற்போது, இந்த அணியில் பிரேசில் வீரர் காசிமிரோவும் இணைந்துள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் காசிமிரோ விளையாடி வந்தார். இந்த நிலையில், இன்டர் மியாமி இணைந்தது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

சந்தேகமே இல்லாமல், நான் இங்கு வந்ததுக்கு காரணம் காலத்திற்கும் மிகச்சிறந்த வீரரான மெஸ்ஸியுடன் விளையாடுவதற்கு மட்டுமே. நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். மெஸ்ஸி வெல்வதற்கு நான் உதவ விரும்புகிறேன்.

எம்எல்எஸ் தொடரில் நான் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறேன். யுனைடெட் அணியில் இருந்து ஒப்பந்தம் முடிந்து வந்திருக்கிறேன். இத்தாலியில் விளையாடவும் மற்ற இடங்களில் மற்ற அணிகளில் சேரவும் வாய்ப்பிருந்தது. ஆனால், இங்கு வரவேண்டும் என நினைத்திருந்தேன்.

நான் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாட விரும்புகிறேன். அவர் வெல்ல உதவ வேண்டும். அவரை இன்னும் மிகப்பெரிய வெற்றியாளராக மாற்ற வேண்டும். அவர் மிகச்சிறந்தவர்; அப்படியில்லையென்றாலும் மிகச் சிறந்தவர்களில் ஒருவர். கால்பந்தின் கடவுள். அவர் வெல்வதற்கு உதவ வேண்டும் என்றார்.

Summary

Brazil player Casemiro joined inter Miami to help 'god of football' Messi win

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.