தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மெஸ்ஸி இல்லாமலேயே வென்ற இன்டர் மியாமி: எப்போது அமெரிக்கா திரும்புவார்?

எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணியின் அசத்தல் வெற்றி குறித்து...

Inter Miami players revel in victory.

வெற்றிக் களிப்பில் இன்டர் மியாமி வீரர்கள். - படம்: எக்ஸ் / இன்டர் மியாமி சிஎஃப்

Published On :

எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி 3-2 என சிகாகோ அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து உலகக் கோப்பை முடிந்து கிளப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா 0-1 என ஸ்பெயின் அணியிடம் தோல்வியுற்றது.

லியோனல் மெஸ்ஸி தனி விமானம் மூலம் தனது சொந்த ஊருக்குச் சென்றார். அவரது தந்தை நோய்மையில் இருப்பதால் அவருடன் சிறுது நாள்கள் இருந்துவிட்டு பின்னர் அமெரிக்கா திரும்புவதாக இருக்கிறார்.

இன்றைய எம்எல்எஸ் போட்டியில் இன்டர் மியாமி அணியும் சிகாகோ அணியும் மியாமி திடலில் மோதின. இதில் லூயிஸ் சௌரஸ் 27ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் ஒரு கோல், 51ஆவது நிமிஷத்தில் மற்றுமொரு கோல் அடித்து அசத்தினார்.

சிகாகோ அணிக்கு 18ஆவது நிமிஷத்தில் மியாமி அணியினரால் ஓன் கோல் ஒன்று கிடைத்தது. பின்னர், 67ஆவது நிமிஷத்தில் மற்றுமொரு கோல் அடித்து 2-2 என சமன்படுத்தியது.

பின்னர், 87ஆவது நிமிஷத்தில் மியாமி அணியின் ப்ரிஸ்டன் ப்ளாம்பெக் கோல் அடித்து 3-2 என வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தை மியாமி தக்கவைத்துள்ளது.

மெஸ்ஸி இந்த மாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் அமெரிக்காவுக்கு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. மெஸ்ஸு மியாமி அணிக்கு மீண்டும் எம்எல்எஸ் தொடரை வென்று தருவாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

Summary

Inter Miami wins without Messi: When will he return to the US?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.