கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஃபிஃபாவின் படைப்புத் திறன் விருது: 0.03 புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்த மெஸ்ஸி!

ஃபிஃபாவின் படைப்புத் திறன் விருதை கடைசி போட்டியில் இழந்த மெஸ்ஸி குறித்து...

News image

லியோனல் மெஸ்ஸி - படம்: ஏபி

Updated On :21 ஜூலை 2026, 6:09 pm IST

ஃபிஃபாவின் படைப்புத் திறன் விருதை கடைசி போட்டியில் மெஸ்ஸி இழந்தார். பிரான்ஸ் அணியின் மிட்ஃபீல்டர் மைக்கல் ஒலிஸே அந்த விருதை வென்றார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா 0-1 என தோல்வியுற்றது. இதில் கோல், அசிஸ்ட் செய்யாத மெஸ்ஸி இதன்மூலம் பல விருதுகளை இழந்துள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் புதியதாக சில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து 0-10 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

ஒரு போட்டியில் அட்டாக்கிங் (கோல் அடிக்க முயலுதல்), கிரியேட்டிவிட்டி (படைப்பாற்றல் திறனுடன் விளையாடுதல்), டிஃபென்ஸ் (கோல்களை தடுத்தல்) ஆகிய பிரிவுகளில் இந்தப் பட்டியல் ஓவ்வொரு போட்டிக்கும் தயார் செய்யப்படுகின்றன. அதன் ஓட்டுமொத்த பட்டியலும் தனியாக நிர்வகிக்கப்படுகிறது.

இந்தப் பட்டியலில் படைப்பாற்றல் திறனுடன் விளையாடுதல் பிரிவில் மெஸ்ஸி இரண்டாம் இடத்துடன் நிறைவு செய்தார். மைக்கல் ஒலிஸே முதலிடம் பிடித்தார். வெறுமனே 0.03 புள்ளி வித்தியாசத்தில் மெஸ்ஸி இதனை இழந்தார்.

தங்கப் பந்து, தங்கக் காலணி விருதுகளுடன் இந்தப் புதிய விருதையும் மெஸ்ஸி இழந்தார். இறுதிப் போட்டியில் நன்றாக விளையாடி இருந்தால் அனைத்தையும் அவர் பெற்றிருக்க முடிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிஃபாவின் படைப்புத் திறன் விருது பட்டியல்

ஃபிஃபாவின் படைப்புத் திறன் விருது பட்டியல் - ஃபிஃபா

Summary

FIFA's Creativity Award: Messi and Olise top the list for the final match!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.