வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... ரயில்வேயில் 1215 'ஸ்டேஷன் மாஸ்டர்' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1215 'ஸ்டேஷன் மாஸ்டர்' பணியிடங்கள்..

ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1215 'ஸ்டேஷன் மாஸ்டர்' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Indian Railway
இந்திய ரயில்வேத் துறையில் பணிபுரிவதே இலக்காகக் கொண்டு தேர்வுக்கு தயாராகி வரும் இருபாலர்களுக்குமான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம்(ஆர்ஆர்பி) வெளியிட்டுள்ளது.
அது குறித்த விவரங்கள் பார்ப்போம்...
இந்திய ரயில்வேத் துறையில் பணிபுரிவதே இலக்காகக் கொண்டு தேர்வுக்கு தயாராகி வரும் இந்திய இளைஞர்களுக்கான நல்வாய்ப்பாக ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1215 'ஸ்டேஷன் மாஸ்டர்' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் நவ.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது முழுவதும் தேர்வு அடிப்படையில் நேரடியாக நிரப்படும் பணி நியமனம் என்பதால் அதிகார பூர்வமற்ற தனியாரிடம் இடைத்தரகர்கள், தரகர்கள், வேலை மோசடி நபர்களிடம் இருந்து ஏமாற வேண்டாம் என தேர்வாணையம் எச்சரித்துள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 08/2026
பணி: 'ஸ்டேஷன் மாஸ்டர்' (STATION MASTER)
காலியிடங்கள்: 1215(சென்னைக்கு 119 இடங்கள்)
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் தங்களது ஆதார் விவரங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஆதார் அட்டையில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதியுடன் 100% சரியாக ஒத்துப்போக வேண்டும். அதே போல் ஆதாரில் உள்ள போட்டோ மற்றும் கைரேகை, கண் கருவிழி பதிவுகளை சமீபத்தில் அப்டேட் செய்திருக்க வேண்டும். மேலும் பயன்பாட்டில் உள்ள செல்போன் எண் மற்றும் சுயமான மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும்
வயதுவரம்பு: 1.1.2027 தேதியின்படி 20 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400
தேர்வு செய்யப்படும் முறை: ஒரே கட்டத்திலான கணினி வழித் தேர்வு (சிபிடி) நடைபெறும்; அதனைத் தொடர்ந்து கணினி வழித் திறன் தேர்வு (சிபிஏடி), சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கான நுழைச்சீட்டை ரயில்வே பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்: மாற்றுத்திறனாளிகள், பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbapply.gov.in என்ற அதிகாரப் பூர்வ இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.11.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Railway Recruitment Board invites online Applications from eligible candidates for engagement of Station Master 1215 vacancies on regular basis
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


