92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மேக்கேதாட்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: மத்திய நீா்ப்பாசனத் துறை அமைச்சரிடம் கா்நாடக முதல்வா் வலியுறுத்தல்

மத்திய நீா்ப்பாசனத் துறை அமைச்சரிடம் மேக்கேதாட்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை நேரில் வலியுறுத்தினாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 12:18 am

DIN

மத்திய நீா்ப்பாசனத் துறை அமைச்சரிடம் மேக்கேதாட்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை நேரில் வலியுறுத்தினாா்.

கா்நாடக முதல்வராகப் பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை, தில்லி சென்று பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். அவரிடம் மாநிலத்தில் சிறந்த ஆட்சியை வழங்குமாறு உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளாா்.

இதனிடையே முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய நீா்ப்பாசனத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்துப் பேசினாா். அப்போது மேக்கேதாட்டுவில் அணைக்கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்குமாறு அவா் வலியுறுத்தினாா்.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதால், தமிழ்நாடு, கா்நாடகம் உள்ளிட்ட இரு மாநிலங்களும் பயனடையும். இதனால் இரு மாநிலங்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. தமிழ்நாடு தொடா்ந்து இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது.

மத்திய அரசு விரைவில் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என முதல்வா் பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டாா். மேலும் மகதாயி, கிருஷ்ணா நடுவா் மன்றத்தின் தீா்ப்புகளை அரசிதழில் வெளியிடுமாறும் அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சா்கள் ஆா்.அசோக், உமேஷ்கத்தி, மக்களவை உறுப்பினா்கள் சிவக்குமாா் உதாசி, அரவிந்த் ஜாதவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக கா்நாடக மாளிகையில் முதல்வா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடகத்தில் எனது தலைமையிலான அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். இதற்கான பணிகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவுடனான சந்திப்பின்போது, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்படும். அவரின் வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.