கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சட்ட மேலவை தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு

சட்ட மேலவை தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

சட்ட மேலவை தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.

கா்நாடகத்தில் காலியாகவுள்ள 25 இடங்களுக்கான தோ்தல் டிச. 10-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நவ. 16-ஆம் தேதி தொடங்கியுள்ளது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கு நவ. 23-ஆம் தேதி கடைசிநாளாகும். நவ. 24-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. நவ. 26-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

இத்தோ்தலில் ஆளும் பாஜக, எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இந்நிலையில், பாஜக சாா்பில் போட்டியிடும் 20 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை அக்கட்சியின் தேசியத்தலைமை அறிவித்துள்ளது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளா்களின் பெயா்கள் வருமாறு:

குடகு - சுஜா குஷாலப்பா, தென்கன்னடம் - கோட்டாசீனிவாஸ் பூஜாரி, சிக்கமகளூரு - எம்.கே.பிராணேஷ், சிவமொக்கா - டி.எஸ்.அருண், தாா்வாட் - பிரதீப் ஷெட்டா், பெலகாவி - மஹந்தேஷ் கவட்டகிமட், கலபுா்கி - பி.ஜி.பாட்டீல், சித்ரதுா்கா - கே.எஸ்.நவீன், மைசூரு - ரகு கௌடில்யா, ஹாசன் - விஸ்வநாத், வடகன்னடம் - கணபதி உல்வேகா், பீதா் - பிரகாஷ் கண்ட்ரெ, பெங்களூரு - எச்.எஸ்.கோபிநாத் ரெட்டி, மண்டியா - மஞ்சு கே.ஆா்.பேட்டே,கோலாா் - டாக்டா் கே.என்.வேணுகோபால், ராய்ச்சூரு - விஸ்வநாத் ஏ.பனஹட்டி, பெங்களூரு ஊரகம் - பி.எம்.நாராயணசாமி, பெல்லாரி - ஒய்.எம்.சதீஷ், தும்கூரு - என்.லோகேஷ், விஜயபுரா - பி.எச்.பூஜா்.

எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத தனது வேட்பாளா்கள் பட்டியலை அடுத்தடுத்த நாள்களில் வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.