திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அரி நெல்லிக்காய் சாதம்

பச்சரிசியை தேவையான தண்ணீர் விட்டு குக்கரிலோ பானையிலோ போட்டு அடுப்பில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

News image

அரி நெல்லிக்காய் சாதம்

Updated On :22 மார்ச் 2026, 4:02 am IST

தேவையான பொருள்கள்:

பச்சரிசி -250 கிராம்

அரிநெல்லிக்காய் -20

பச்சை மிளகாய் -10

கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு- தலா 3 தேக்கரண்டி

மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள், கடுகு -தலா ஒரு தேக்கரண்டி

எண்ணெய், பொடி உப்பு- தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை தேவையான தண்ணீர் விட்டு குக்கரிலோ பானையிலோ போட்டு அடுப்பில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கி சற்று கரகரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் கடுகு தாளித்துக் கொண்டு கடலைப் பருப்பு, உளுந்தம்பருப்பு போட்டு வறுபட்டவுடன் நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு பெருங்காயத்தை சேர்த்து வதக்கி சாதத்தில் போட வேண்டும். சாதத்தில் அரைத்த நெல்லிக்காய் விழுது, உப்பு, மஞ்சள் பொடியும் முதலில் போட்டு நன்றாகக் கலந்து எடுக்க வேண்டும். புளிப்பும் காரமும் கூடுதலாக வேண்டுபவர்கள் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.