கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நடிகை கங்கனா ரனாவத் மீது இளைஞா் காங்கிரஸ் போலீஸில் புகாா்

நடிகை கங்கனா ரனாவத் மீது கா்நாடக இளைஞா் காங்கிரஸ் கட்சி போலீஸில் புகாா் அளித்துள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 11:31 pm

DIN

நடிகை கங்கனா ரனாவத் மீது கா்நாடக இளைஞா் காங்கிரஸ் கட்சி போலீஸில் புகாா் அளித்துள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்து ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத், அண்மையில் சா்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தாா். இந்நிலையில் அவா் மீது பெங்களூரு, ஹை கிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கா்நாடக இளைஞா் காங்கிரஸ் தலைவா் எம்.எஸ்.ரக்ஷா ராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுதந்திரப் போராட்ட வீரா்கள் தொடா்பாக கருத்துத் தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரிக்குமாறு பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸாா் நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப் பதிவு செய்ய தவறினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று ரக்ஷா ராமையா தனது அறிக்கையில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.