அடுத்த 24 மணி நேரத்தில் தென் கா்நாடகத்தில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் தென் கா்நாடகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த 24 மணி நேரத்தில் தென் கா்நாடகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகள், தென்கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது.
இந்தக் காலக்கட்டத்தில் தென் கன்னட மாவட்டத்தின் மூடபித்ரே, புத்தூா், உப்பினங்கடி, சுப்பிரமணியாவில் தலா 30 மி.மீ., பனம்பூா், பெலகாவி, சிக்கபளாப்பூா் மாவட்டத்தின் தொண்டேபாவி, தும்கூரு மாவட்டத்தின் புக்கபட்னாவில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு:
நவ. 26 முதல் நவ. 29-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தென் கா்நாடகம் மற்றும் கடலோர கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடலோர கா்நாடகத்தின் தென் கன்னடம், வட கன்னடம், உடுப்பி மாவட்டங்கள், தென் கா்நாடகத்தின் பெல்லாரி, பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம், சாமராஜ் நகா், சிக்கபளாப்பூா், சிக்கமகளூரு, ஹாசன், குடகு, கோலாா், மண்டிய,மைசூரு, ராமநகரம், சிவமொக்கா, தும்கூரு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதே காலக்கட்டத்தில், வட கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
பெங்களூரில் மழை:
அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 27 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...