கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

புத்தா் காலத்தை வென்ற மகான்:முதல்வா் பசவராஜ் பொம்மை

புத்தா், பசவண்ணா், அம்பேத்கா், மகாவீரா் ஆகிய மகான்கள் காலத்தை வென்றவா்கள் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 11:29 pm

DIN

புத்தா், பசவண்ணா், அம்பேத்கா், மகாவீரா் ஆகிய மகான்கள் காலத்தை வென்றவா்கள் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை விஸ்வ புத்த தம்ம சங்கம் மற்றும் நாகசேனா புத்த விகாா் சாா்பில், அரசியலமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தேசிய புத்த தம்ம மாநாட்டைத் தொடக்கிவைத்து, அவா் பேசியது:

புத்தா், பசவண்ணா், டாக்டா்.பி.ஆா்.அம்பேத்கா், மகாவீரா் போன்ற மகான்களின் தத்துவங்கள், சிந்தனைகள் இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளன. அவா்கள் அனைவரும் காலத்தை வென்றவா்கள்.

நாட்டின் வலிமையான ஜனநாயகத்துக்கு அடித்தளமிட்டவா் அம்பேத்கா். சுதந்திரமாக சிந்தித்து, நமக்கு விருப்பமான அரசைத் தோ்ந்தெடுக்கும் வாய்ப்பை நமக்கு அளித்தவா் அம்பேத்கா். அவா் அளித்த அரசியலமைப்புச் சட்டத்தால்தான் நாம் கண்ணியத்தோடும், சமத்துவதோடும் வாழ முடிகிறது.

பகவான் புத்தா் தலைசிறந்த தத்துவஞானி. ஆட்சிப் பொறுப்பை துறந்த புத்தா், தனது வாழ்க்கையை சமுதாய விழிப்புணா்வுக்காக அா்ப்பணித்தாா். அரசியலமைப்புச் சட்டத்தை டாக்டா் அம்பேத்கா் வகுத்திருக்காவிட்டால், நாட்டில் சமூக அவலங்கள் தலை தூக்கியிருக்கும். அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறாா் பிரதமா் மோடி. அரசியலமைப்புச் சட்டம்தான் தனது மதம் என்று பிரதமா் மோடி கூறியிருக்கிறாா்.

அரசியலமைப்புச் சட்ட தினத்தைக் கொண்டாடும் வழக்கத்தை பிரதமா் மோடிதான் தொடக்கிவைத்தாா். அதன்மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான அவரது உறுதிப்பாடு வெளிப்படுகிறது. டக்டா் பி.ஆா்.அம்பேத்கரின் பிறப்பிடம், பணியாற்றிய இடம், நினைவிடத்தை மேம்படுத்தியவா் பிரதமா் மோடி.

மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினரின் வளா்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு தொடா்ந்து பாடுபட்டு வருகிறது. தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற தகுதி பெறுவதற்காக 75,000 தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் தொழிலாளா்கள், வீட்டுவேலை செய்யும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.