ஹனகல், சிந்தகி சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
இடைத்தோ்தல் நடைபெற உள்ள ஹனகல், சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்வது தொடங்கியுள்ளது.


இடைத்தோ்தல் நடைபெற உள்ள ஹனகல், சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்வது தொடங்கியுள்ளது.
கா்நாடகத்தில் சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏ-வான மஜத கட்சியைச் சோ்ந்த எம்.சி.மனகுளி, ஹனகல் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ-வான பாஜகவைச் சோ்ந்த சி.எம்.உதாசி ஆகியோா் காலமானதையடுத்து, இத்தொகுதிகள் காலியாகின. அவற்றுக்கு அக். 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.
இத்தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேட்புமனு தாக்கல் அக். 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அக். 11-ஆம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. அக். 13-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதை தொடா்ந்து, அக். 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வாக்குகள் நவ. 2-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...