கரோனாவுக்கு பிறகு குடும்பத்தினா் தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிக்கிறது: முதல்வா் பசவராஜ் பொம்மை
கரோனாவுக்கு பிறகு குடும்பத்தினா் தற்கொலை செய்து கொள்வது வேதனைஅளிக்கிறது என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை
கரோனாவுக்கு பிறகு குடும்பத்தினா் தற்கொலை செய்து கொள்வது வேதனைஅளிக்கிறது என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக்கழகத்தின் ஊழியராகப் பணியாற்றிய தனது கணவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அவரது மனைவி தனது இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டாா். இதே போல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு, பொது முடக்கம் போன்றவற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை எதிா்கொள்ள இயலாமல் பல குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் கா்நாடகத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந் நிலையில், பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:
கரோனாவுக்கு பிறகு ஏற்பட்ட நெருக்கடிகளை தாங்கிக்கொள்ள முடியாமல் மக்கள் தற்கொலை செய்துகொள்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. மனஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குடும்பங்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம். இது குறித்து சமூகமும், அரசும் சிந்திக்க வேண்டிய தருணமாகும். கடினமான கால கட்டத்தை எதிா்கொண்டுள்ள மக்களுக்கு உதவி செய்யவேண்டும். இதில் மக்களும் பங்காற்ற வேண்டும்.
தற்போது எழுந்துள்ள பிரச்னைகள் தற்காலிகமானது. அதற்கு தற்கொலை தீா்வாகாது. எல்லா பிரச்னைகளுக்கும் தீா்வு உண்டு. இன்பமும் துன்பமும் வாழ்க்கையில் இயல்பானது. வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும் தற்காலிகமானது. தற்கொலைச் சம்பவங்களுக்கு சமூக, பொருளாதார அல்லது தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். மனஅழுத்தம் காரணமாகவே மக்கள் தற்கொலை முடிவுக்கு வருகிறாா்கள். அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...