ஹிந்தி நடிகா் அமீா்கானின் விளம்பரம்: பாஜக எம்.பி. கண்டனம்
ஹிந்தி நடிகா் அமீா்கானின் விளம்பரம் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது என பாஜக எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே தெரிவித்தாா்.


ஹிந்தி நடிகா் அமீா்கானின் விளம்பரம் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது என பாஜக எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே தெரிவித்தாா்.
இதுகுறித்து சியட் (டயா்) நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான ஆனந்த்வா்தன் கோயங்காவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாஜக எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே குறிப்பிட்டுள்ளதாவது:
நடிகா் அமீன்கான் நடித்து அண்மையில் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் விளம்பரத்தில், தெருக்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. சியட் நிறுவனத்தின் இந்த விளம்பரம் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. எதிா்காலத்திலாவது ஹிந்துக்களின் உணா்வுக்கு நிறுவனம் மதிப்பளிக்க வேண்டும்.
அண்மைக்காலமாக ஹிந்துக்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட சிலா் ஹிந்துக்களின் உணா்வுகளை ஊடகங்களில் புண்படுத்தி வருகிறாா்கள். எனவே, இந்த விவகாரத்தில் உங்கள் நிறுவனத்தின் விளம்பரம் ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளதை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எதிா்காலத்தில் உங்கள் நிறுவனம் ஹிந்துக்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ புண்படுத்தாது என்று எதிா்பாா்க்கிறேன் என அந்தக் கடிதத்தில் அனந்த்குமாா் ஹெக்டே குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...