சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பெங்களூரு-பலிஜகண்டிரிகா இடையே புதிய பேருந்து சேவை

பெங்களூரில் இருந்து பலிஜகண்டிரிகாவுக்கு புதிதாக பேருந்து சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 7:08 pm

DIN

பெங்களூரில் இருந்து பலிஜகண்டிரிகாவுக்கு புதிதாக பேருந்து சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரில் இருந்து ஆந்திர மாநிலம், பலிஜகண்டிரிகாவுக்கு புதிதாக விரைவு பேருந்து சேவை வெள்ளிக்கிழமை (அக். 29) முதல் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரு-பலிஜகண்டிருகா இடையிலான பேருந்து பெங்களூரிலிருந்து (ஜம்புசவாரி தின்னே) தினமும் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, முற்பகல் 11.30 மணிக்கு பலிஜகண்டிரிகாவை சென்றடையும். அதேபோல, பலிஜகண்டிரிகாவிலிருந்து இருந்து தினமும் நண்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.05 மணிக்கு பெங்களூரு வந்தடையும். இதன் கட்டணம் ரூ. 280 ஆகும். சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவுசெய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரே பயணச்சீட்டில் 4 பேருக்கு மேற்பட்டோருக்கு முன்பதிவு செய்தால் 5 சதவீத தள்ளுபடியும், மறுபயணம் மேற்கொண்டால் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த வசதியைப் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.