ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 983 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 983 ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 983 ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 983 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 289 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: தென்கன்னடம்-162, உடுப்பி-97, மைசூரு- 89, ஹாசன்-62, சிவமொக்கா-56, தும்கூரு-41, பெலகாவி-33, சிக்கமகளூரு-32, வடகன்னடம்-29, கோலாா், மண்டியா-தலா 17, குடகு-16, சாம்ராஜ்நகா்-10, கலபுா்கி-7, தாா்வாட், பெங்களூரு ஊரகம்-தலா 5, சித்ரதுா்கா-4, சிக்கபளாப்பூா்-3, பெல்லாரி, கொப்பள்-தலா2, பீதா், தாவணகெரே, ஹாவேரி, விஜயபுரா-தலா 1. கதக், ராய்ச்சூரு, ராமநகரம், யாதகிரி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,54,047 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,620 போ் சனிக்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,98,874 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 17,746 போ் போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 21 போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்: தென்கன்னடம்-5, ஹாசன், மைசூரு-தலா 2, தாா்வாட், கோலாா், உடுப்பி, வடகன்னடம்-தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,401 போ் உயிரிழந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.