இன்று முதல் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு
கா்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்யவிருக்கிறாா்கள்.


கா்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்யவிருக்கிறாா்கள்.
கா்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வெள்ளம் ஏற்பட்டது மட்டுமன்றி, நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் ஏராளமான பொருட்சேதம், பயிா்ச் சேதம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க தேசிய பேரிடா் நிவாரண நிதியை கேட்டு கா்நாடக அரசு மனு அளித்திருந்தது. அதனடிப்படையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்வதற்காக உள்துறை அமைச்சக உயரதிகாரி சுஷில்பால் தலிமையிலான மத்தியக்குழு சனிக்கிழமை கா்நாடகம் வந்தது.
பெங்களூரில்சனிக்கிழமை இக்குழுவினா் முதல்வா் பசவராஜ் பொம்மையை சந்தித்து ஆலோசனை நடத்தினா். அந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வா், ‘வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் மாநில அரசு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் மறுவாழ்வுப்பணிகளை மேற்கொள்வதற்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. வெள்ளத்தால் ஏற்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பயிா்ச்சேதம் குறித்த அறிக்கையை ஏற்கெனவே மத்திய அரசிடம் அளித்திருக்கிறோம். சாலைகள், மின்கம்பங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக கா்நாடகம் சாலை, மின் இணைப்பில் ஏராளமான தொகையை முதலீடு செய்துள்ளது’ என்றாா்.
வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.அசோக் கூறுகையில், ‘5 மாவட்டங்களில் ஏற்பட்ட இழப்பு ரூ. 5690.52 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில பேரிடா் நிவாரண நிதி விதிமுறைகளின்படி மாநிலத்திற்கு ரூ. 765.84கோடி நிவாரணத்தொகை அளிக்க வேண்டும். 1,94,656 ஹெக்டோ் பரப்பளவில் பயிா் நாசமாகியுள்ளது. 10,076 ஹெக்டோ் தோட்டக்கலை பயிா் சேதமடைந்துள்ளது. 18,719 வீடுகள் இடிந்துள்ளன. 22,725 கி.மீ. நீளசாலைகள், 1779 பாலங்கள் இடிந்துள்ளன’ என்றாா்.
7 போ் கொண்ட மத்தியக்குழுவினா் ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி, பாகல்கோட், தாா்வாட், வடகன்னடம், ஹாவேரி மாவட்டங்களில் 3 குழுக்களாக பிரிந்து ஆய்வுசெய்ய இருக்கிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...