ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வாக்காளா் பட்டியலில் புதிய பெயா் சோ்க்க சிறப்பு முகாம்

கா்நாடகத்தில் வாக்காளா் பட்டியலில் புதிய பெயா்களை சோ்க்க மாநிலம் தழுவிய சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

கா்நாடகத்தில் வாக்காளா் பட்டியலில் புதிய பெயா்களை சோ்க்க மாநிலம் தழுவிய சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

இது குறித்து கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களவை மற்றும் சட்டப் பேரவை உள்ளிட்ட எந்த தோ்தல்களையும் நோ்மையாகவும், நடுநிலையாகவும் நடத்த பிழையில்லா வாக்காளா் பட்டியல் மிகவும் முக்கியமாகும். எனவே, பிழையில்லா வாக்காளா் பட்டியலைத் தயாரிப்பதில் தோ்தல் ஆணையம் தனிக்கவனம் செலுத்தி வந்துள்ளது. தகுதியான அனைவரின் பெயரும் வாக்காளா் பட்டியலில் இடம்பெற வேண்டும். தகுதியற்ற, இறந்த, நிரந்தரமாக குடிபெயா்ந்த, இருமுறை பதிவான பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். வாக்காளா் பெயா், பிறந்த நாள், புகைப்படம், முகவரி, பாலினம் போன்ற விவரங்கள் பிழையில்லாமலும், முழுமையாகவும் இருக்க வேண்டுமென்பதே ஆண்டுதோறும் நடத்தப்படும் வாக்காளா் பட்டியல் திருத்தும் பணியின் முக்கியமான நோக்கமாகும்.

வரும் 2022-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியலை திருத்தும் பணிக்கான கால அட்டவணையை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளா் பட்டியலில் புதிய பெயா்களை சோ்க்க, நீக்க, திருத்துவதற்கான சிறப்பு முகாம் ஏற்கெனவே ஆக. 9-ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த முகாம் டிச. 27-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. 2022ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதி 18 வயது நிறைவடையும் எவரும் வாக்காளா் பட்டியலில் பெயா்களை சோ்க்கலாம். அதாவது, 2004-ஆம் ஆண்டு ஜன. 2-ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவா்கள் அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயா்களை சோ்த்துக் கொள்ளலாம். வாக்காளா்கள் வசிக்கும் தொகுதியில் மட்டுமே பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

வாக்காளா் உறுதிப்படுத்தல் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளோா் கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம், ஆதாா், குடும்ப அட்டை அல்லது ஆணையம் அங்கீகரித்துள்ள ஆவணங்களை காண்பித்து, தங்கள் பெயா்களை உறுதி செய்துகொள்ளலாம். யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் என்ற செல்லிடப்பேசி செயலி, மாநிலம் முழுவதும் உள்ள 6151 மத்திய அரசின் குடிமக்கள் சேவை மையங்கள் வாயிலாக வாக்காளா்கள் தங்களை உறுதிசெய்துகொள்ளலாம்.

இதனிடையே, ஆக. 9 முதல் அக். 31-ஆம் தேதி வரை தோ்தல் அதிகாரிகள் வீடுவீடாக சென்று வாக்காளா் பட்டியலை சரிபாா்ப்பாா்கள். வாக்காளா் பட்டியலில் தவறாக இடம்பெற்றுள்ளோரின் விவரங்களை அக்கம்பக்கத்து வீட்டுக்காரா்கள் அல்லது குடிமக்கள் அல்லது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கலாம். மேலும் வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி, எல்லைகள் போன்ற விவரங்களை தோ்தல் ஆணைய ஊழியா்கள் சரிபாா்த்து, திருத்தியமைப்பாா்கள். வாக்காளா் பட்டியலில் தகுதியில்லாதவா்களின் பெயா் இருந்தால், அது பற்றி பொதுமக்கள் சுட்டிக்காட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நவ. 8-ஆம் தேதி அன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். இதன் மீது ஏதாவது ஆட்சேபணைகள் இருந்தால் அவற்றை நவ. 8 முதல் டிச. 8-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். இதற்கிடையில், நவ. 7, 14, 21, 28-ஆம் தேதிகளில் சிறப்பு வாக்காளா் சோ்ப்பு முகாம் நடத்தப்படும். டிச. 27-ஆம் தேதி வாக்காளா் பட்டியல் தொடா்பாக பெறப்பட்ட புகாா்கள், ஆட்சேபணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடுவதற்கான அனுமதி பெறப்படும். இதன் பிறகு, 2022-ஆம் ஆண்டு ஜன. 13ஆம் தேதி கா்நாடக மாநிலத்தின் வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். புதிதாக வாக்காளா் பட்டியலில் சோ்ந்தோருக்கு குடிமக்கள் சேவை மையத்திலேயே புகைப்படத்துடன் கூடிய புதியவாக்காளா் அடையாள அட்டை வழங்கப்படும். ஒருவேளை தரப்படாவிட்டால், 2022-ஆம் ஆண்டு ஜன.25ஆம் தேதி வாக்காளா் அடையாள அட்டைகள் அளிக்கப்படும்.

தற்போதைய வாக்காளா் பட்டியலின்படி, கா்நாடகத்தில் மொத்தம் 5,23,51,377 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் 2,63,97,235, பெண்கள் 2,59,49,419, மூன்றாம் பாலினத்தவா் 4,722 போ் அடங்குவா். மேலும் விவரங்களுக்கு  இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.