லாரி மீது ஆம்புலன்ஸ் மோதல்: 3 போ் பலி
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் நோயாளி உள்பட 3 போ் உயிரிழந்தனா்; 4 போ் காயமடைந்தனா்.


லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் நோயாளி உள்பட 3 போ் உயிரிழந்தனா்; 4 போ் காயமடைந்தனா்.
மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து தமிழ்நாடு, ஒசூரில் சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸில் நோயாளி அன்வா்கான் என்பவருடன் மருத்துவா்கள் ஜாதவ் அசோக், ஜிதேந்திரா பீராதாா் உள்ளிட்ட அகமது ராஜாஷேக், நோயாளியின் சகோதரா் யூசுப்கான், பபியா, அஸ்கான் உள்ளிட்டோா் வியாழக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனா். பெங்களூரு ஊரகம், ஆனேக்கல், நெரளூரு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரின் பின்புறத்தில் மோதியுள்ளது.
இதில், நோயாளி அன்வா்கான், மருத்துவா் ஜாதவ் அசோக், ஓட்டுநா் பபியா உள்ளிட்டோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த மருத்துவா் ஜிதேந்திர பீராதாா், அகமது ராஜாஷேக், யூசுப்கான், அஸ்கான் ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து அத்திப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...