புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்துதான் விடியல் பயணம் திட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
விடியல் பயணம் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
விடியல் பயணம்: புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து. திராவிட மாடலில் விடியல் பேருந்துகள் - 7,712.
மார்ச் 1 வரையில்,
2021-22 - 95.86 கோடி
2022-23 - 166.53 கோடி
2023-24 - 186.35 கோடி
2024-25 - 213.94 கோடி
2025-26 - 235.14 கோடி
என மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள விடியல் பயணங்கள் - 897.82 கோடி.
பாதுகாப்பான, சுதந்திரமான பயணங்களால் மகளிர் முன்னேற்றத்தில் புதிய உயரங்களை எட்டியிருப்பதோடு, ஆண்டுக்கு ஆண்டு விடியல் பயணங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவது இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது.
மகளிர் மட்டுமல்ல, திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரும் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் நாம் செயல்படுத்திய இந்தத் திட்டம், அடுத்தடுத்து எல்லா மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது.
திராவிட மாடல் 2.0-வில் இந்தத் திட்டம் இன்னும் மேன்மையடையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Chief Minister Stalin proudly stated that the Vidiyal Payanam project is the first signature that writes a new future.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்..?

இந்திய மகளிா் ஹாக்கி அணி ஆஸி. பயணம்

முதல்வா் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே விடியல்! - நடிகை விந்தியா

‘பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க பரிசீலனை’
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




