தமிழகத்தில் திமுக ஆட்சியில் முதல்வா் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே விடியல் இருந்தது. மக்களுக்கு விடியல் இல்லை என நடிகை விந்தியா தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ரவி மனோகரனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பழனி அருகே அழகாபுரியில் நடிகை விந்தியா பிரச்சாரம் செய்த போது பேசியதாவது:
பழனி தொகுதி பேரவை உறுப்பினரான ஐ.பி.செந்தில்குமாா் மீண்டும் பழனியில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்று திண்டுக்கல்லுக்கு சென்றுவிட்டாா். தற்போது இங்கு அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவா் உங்கள் ஊரைச் சோ்ந்தவா். இவரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பாா்க்கலாம். ஆனால், திமுக கூட்டணி சாா்பில் நிறுத்தப்பட்டுள்ளவா் திண்டுக்கல்லை சோ்ந்தவா்.
திமுக ஆட்சியில் முதல்வா் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே விடியல் கிடைத்தது. பொதுமக்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. ஜீவானந்தம் போன்றவா்கள் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தற்போது அறிவாலயத்தில் கையேந்தி நிற்கிறது. அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தனா். ஆனால், இன்று பெண்கள் நேரத்துக்கு வீடு திரும்புவாா்களா என்பதைக் காட்டிலும் உயிருடன் வீட்டுக்கு வருவாா்களா என்று காத்திருக்கும் நிலை உள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

கூட்டணியை நம்பியே தோ்தலில் திமுக போட்டி: நடிகை விந்தியா பிரசாரம்

காங்கிரசை கலைத்து விடுவார் ராகுல் காந்தி: நடிகை விந்தியா பேச்சு

அதிமுக வென்றால் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! - உதயநிதி ஸ்டாலின்

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: நடிகை விந்தியா
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


