லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக திரிணமூல் - காங்கிரஸ் கட்சிகள் சதி செய்ததாக பிரதமர் மோடி பேசியது குறித்து...

News image

நரேந்திர மோடி - பிடிஐ

Updated On :19 ஏப்ரல் 2026, 4:23 pm IST

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை சதி செய்து தடுத்த திரிணமூல் காங்கிரஸுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மேற்கு வங்க மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 19) தெரிவித்தார்.

மேலும், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் பெண்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்திற்குட்பட்ட விஷ்ணுபூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 19) பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் திரிணமூல் காங்கிரஸை விமர்சித்து பிரதமர் மோடி பேசியதாவது:

’''திரிணமூல் காங்கிரஸ் பெண்களுக்கு அதிகாரமளித்தலையும் இட ஒதுக்கீட்டையும் விரும்பவில்லை. மேற்கு வங்க பெண்கள் மமதாவின் மகா காட்டு ராஜ்ஜியத்திற்கு சவால் விடுவதால், அம்மாநிலப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ சட்டப்பேரவை உறுப்பினர்களாகவோ மாறுவதை திரிணமூல் விரும்பவில்லை.

அதனால், அவர்கள் காங்கிரஸுடன் சதி செய்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்தனர். இந்தத் தேர்தலில் மேற்கு வங்கப் பெண்கள் திரிணமூல் காங்கிரஸை தண்டிப்பார்கள்.

பாஜகவின் அடையாளம் என்பது பெண்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்துள்ளது. வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதில் மகளிரின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்றும், அதிகமான பெண்கள் அரசியலில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்.

ஆனால், நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஒருமுறை மேற்கு வங்கத்தின் சகோதரிகளுக்கு துரோகமிழைத்துள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

Summary

TMC Congress conspired to block women’s quota Bill, will be punished in Bengal polls: PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.