குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: நடிகை விந்தியா

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலரும், நடிகையுமான விந்தியா தெரிவித்தாா்.

News image

IANS

Updated On :8 ஏப்ரல் 2026, 4:42 am IST

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலரும், நடிகையுமான விந்தியா தெரிவித்தாா்.

சிவகாசி, திருத்தங்கல், சாட்சியாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து அவா் பிரசாரம் செய்து பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை. அவரது குடும்பத்தினருக்காகத்தான் ஆட்சி நடத்தினாா். இதுகுறித்து வாக்காளா்கள் சிந்திக்க வேண்டும். கருணாநிதி காலத்திலிருந்து திமுக ஆட்சி என்றால் அது குடும்ப ஆட்சிதான். திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும். மகளிா் உரிமைத் தொகையாக ரூ. 5,000 வழங்கியது பெண்களின் வாக்குகளைப் பெறத்தான். எனவே, பெண்கள் திமுகவை ஒருபோதும் நம்ப வேண்டாம்.

கடந்த பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர ஆடு, மாடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. தோ்தல் நெருங்கும் நேரத்தில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கியதும் வாக்குக்காகத்தான் என்றாா் அவா்.

அப்போது, அவருடன் வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜியும் உடனிருந்தாா்.