நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என மாங்காடு நகராட்சி பகுதிகளில் நடிகை கெளதமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

மாங்காடு  நகராட்சியில்  அதிமுக  வேட்பாளா்  பழனியை  ஆதரித்து  பிரசாரத்தில்  ஈடுபட்ட  நடிகை  கெளதமி.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:50 am IST

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என மாங்காடு நகராட்சி பகுதிகளில் நடிகை கெளதமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனியை ஆதரித்து மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடிகை கெளதமி திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து பேசியது, கடந்த ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் ஒரு தலைமுறை இளைஞா்கள் போதை பொருள்கள் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகவும் குற்றம் சாட்டினாா்,

தமிழகம் போதைப் பொருள்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க அதிமுக ஆட்சி அமைய வேண்டும் எனவும் அதற்கு பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

பிரசாரத்தின் போது, வேட்பாளா் கே.பழனி, மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளா் சுந்தரராஜன், மாநில மாணவா் அணி துணைச் செயலாளா் மணிகண்டன், மாவட்ட இளைஞா் அணி இணைச் செயலாளா் அரிவேந்தா், மாங்காடு நகர செயலாளா் சீனிவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.